இந்தியா

அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும்.. உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி, சிஜேபி பேரணி செல்ல உள்ள நிலையில் தலைமை நீதிபதி கருத்து

வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவது ஆகியவற்றை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை அவரிடம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.

ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்ததை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

'வாக்குத் திருட்டு' பிரச்சினையை முன்னிறுத்தி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகலை வலியுறுத்தி இன்று பிற்பகல் 1:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி பேரணி செல்ல உள்ளது.

கடிதம்

முன்னதாக இந்த பேரணி நிறைவில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து மனு கொடுக்க அவகாசம் கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.

வாக்குத் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகச் செய்வது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை நிறுத்துவது, மற்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்புவது ஆகியவற்றை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை அவரிடம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.

மறுப்பு

ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சந்திப்பை மறுத்த தனது முடிவு குறித்த கேள்விக்கு சூர்யகாந்த் பதிலளித்துள்ளார்.

இன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனக்கு நேற்று கடிதம் கிடைத்தது, நேற்று இரவு அதற்குப் பதிலளித்தேன்.

அவரை (ராகுலை) சந்திக்க இயலாததை தெரிவித்ததற்கான சில காரணங்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்கள் குறித்த கேள்விக்கு "அந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நான் அதன் ரகசியத்தன்மையைப் பேணி வருகிறேன்" என்று கூறினார்.

அனைவருக்கும் திறந்திருக்கும்

மேலும், " உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் மனுவுடன் எங்களை அணுகலாம்" என்றும் சூர்யகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எங்களை அணுகும் உரிமை உண்டு.

நாங்கள் சட்டத்தின்படி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு உரிமையுள்ள நிவாரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.

அதே நேரம் இந்த பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பேரணியில் தாமும் பங்கேற்போம் என அதன் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்

டெல்லியில் சூழல்

டெல்லியில் நிலவும் சூழல் மற்றும் போராட்டங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​அது ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்று கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே தலைமை நீதிபதியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டபோதும் திட்டமிட்டபடி இந்தியா கூட்டணி உச்சநீதிமன்றம் நோக்கி மதியம் 1.30 மணியளவில் பேரணியை தொடங்க உள்ளனர்.

அதே நேரம் இந்த பேரணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பேரணியில் தாமும் பங்கேற்போம் என அதன் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT