இந்தியா

எங்கே போவோம்?.. டெல்லி யமுனா பஜாரில் வீடுகள் இடிப்பு - நடுதெருவில் நிற்கும் 310 ஏழைக் குடும்பங்கள் கேள்வி

வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்பே திடீரெனப் வீடுகளை இடிக்கத்தாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இடிப்பு

டெல்லி யமுனா பஜார் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மக்களின் வீடுகள் கடந்த ஜூன் கடந்த ஜூன் 25 புல்டோசர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூறி டெல்லி மேம்பாட்டு ஆணையமும் மாநகராட்சியும் இணைந்து இந்த புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது.

குற்றச்சாட்டு

அங்கிருந்து ஜூலை 4 தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றுதான் தங்களுக்கு வழங்கப்பட்ட இறுதி நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாக கூறும் மக்கள், வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்பே திடீரெனப் வீடுகளை இடிக்கத்தாக குற்றம்சாட்டியுள்ளனர்.

வீடுகளை இடிப்பதற்கு முன்பாகவே, அப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் அதிகாரிகள் துண்டிக்கப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாழ்வாதாரம்

இப்பகுதியில் வசித்து வந்தவர்கள் பல தலமைமுறைகளாக யமுனை நதிக்கரையை நம்பி வாழ்ந்து வரும் விளிம்புநிலை மக்கள் ஆவர்.

யமுனை காட் பகுதிகளில் உள்ள கோவில்களை நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், படகோட்டிகள், பூ வியாபாரிகள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் என நதிக்கரையை வாழ்வாதாரமாகக் கொண்ட 310 குடும்பங்கள் தற்போது வீடிழந்து நிற்கின்றனர்.

கேள்வி

பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்ததே இதே அரசுதான்.

இப்போது ஒருநாளில் எங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி எப்படி வெளியேற்றலாம்? எங்களுக்கு மாற்று இடமோ, மறுவாழ்வுக்கான எந்தவொரு வசதியோ செய்து தராமல் துரத்துவது நியாயமா? என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுற்றுச்சூழல்

யமுனை நதியின் வெள்ளப் பாதிப்புக்குரிய O Zone பகுதியில் இந்த குடியிருப்புகள் அமைந்திருந்ததாவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் டெல்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில், தகுந்த மாற்று ஏற்பாடுகள் இன்றி ஏழை மக்களின் வாழ்வாதாரமும், தங்குமிடமும் பறிக்கப்பட்டிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.