நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே போராட்ட களத்தில் பேசுகையில், கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் விலக வேண்டும் என்றார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், மாணவர்களின் இந்த உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
போராட்டத்தை முடக்குவதற்காக டெல்லி போலீசார் பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக கரப்பான்பூச்சி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று இரவு போராட்டக் களத்தில் விளக்குகள் அனைத்தையும் போலீசார் அணைத்துவிட்டதாகவும், குடிநீர் விநியோகத்தை நிறுத்தியதாகவும் கரப்பான்பூச்சி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் உணவு மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அணுக விடமால் உணவு மற்றும் கழிவறை வசதிகளை அணுக விடாமல் தடுத்ததாகவும் கரப்பான்பூச்சி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு கருதி, போராட்டக் களத்தை உடனடியாகக் காலி செய்யுமாறு போலீசார் போராட்டக்காரர்களை அறிவுறுத்தி வருவதால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.