இந்தியா

சாந்தினி சௌக்-ல் AQI 428: மூச்சு விடவே முடியல- டெல்லி மக்கள் அவதி

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.

வானம் தெளிவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதுடன், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் காற்றின் ஈரப்பதம் 100 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் பதிவாகியுள்ளது. சமீர் செயலியின் தரவுப்படி, நகரின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 329 ஆக உள்ளது. டெல்லியில் உள்ள மொத்த 54 கண்காணிப்பு நிலையங்களில், 44 நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ என்ற அளவிலும், இரண்டு நிலையங்களில் ‘கடுமையான’ பிரிவிலும் காற்றுத் தரம் பதிவாகியுள்ளது. இதில் சாந்தினி சௌக் பகுதியில் அதிகபட்சமாக 428 என்ற ஏக்யூஐ அளவு பதிவாகியுள்ளது.

வானிலை நிலவரம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. இது இந்தப் பருவத்தின் சராசரி வெப்பநிலையை விட 0.4 புள்ளிகள் அதிகமாகும். வானம் தெளிவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதுடன், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் காற்றின் ஈரப்பதம் 100 சதவீதமாக பதிவாகியுள்ளது.

சிபிசிபி காற்றுத் தர அளவுகோல்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரையறைப்படி, காற்றுத் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் ‘நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை ‘மிதமானது’ என்றும் கணக்கிடப்படுகிறது. அதேபோல், 201 முதல் 300 வரை ‘மோசம்’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசம்’ , மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT