இந்தியா

எத்தனால் கலப்பால் மைலேஜ் குறைய வாய்ப்பா?- அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கம்

E20 திட்டத்தின் கீழ் வாகன செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம், குறித்து நுகர்வோர் மத்தியில் நிலவும் அச்சத்திற்கு அமைச்சர் பூரி பதிலளித்தார்.

சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்து உள்ளது . கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்கு இது வீழ்ச்சியடைந்துள்ளது.

புதுடெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்பதீப் சிங்க் பூரி செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவரிடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி வைக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்து அவர் கூறியதாவது:-

எண்ணெய் நிறுவனங்களின் நிலைமை என்ன?

தேசிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் நிலைமை குறித்த முக்கிய தகவல்களை வழங்கினார்.

உலகளாவிய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து நுகர்வோர்களை பாதுகாப்பதற்காகவே எண்ணெய் நிறுவனங்கள், விலையை குறைக்கும் முறையை கையாண்டுள்ளது. அதனால் இந்நிறுவங்களின் நிதி நிலையில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை அடக்க விலையை விட குறைவாக விற்பனை செய்ததன் மூலம் ரூ. 74,781 கோடி நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்துள்ளன.

விலை குறையுமா?

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவையொட்டி, அடுத்த சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய்யின் விலை இதே நிலையில் நீடித்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பது குறித்த இந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். மேலும் அடுத்த வாரங்களில் இதன் நிலைமை எப்படி இருக்கும் என்று நான் தற்போதே யூகித்து கூறுவது சரியானதாக இருக்காது.

E20-ஆல் நிலவும் குழப்பம்!

மேலும் பேசிய அவர், E20 திட்டத்தின் கீழ் வாகன செயல் திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து நுகர்வோர் மத்தியில் நிலவும் அச்சத்திற்கு பதிலளித்தார்.

அவர் கூறுகையில், பந்தயக் கார்களிலும் எத்தனாலை பயன்படுத்துகிறார்கள். இதனால் வேகம் அதிகரித்து, நாக் ஏற்படுவது மேம்படுகிறது. அனால் ஒரு சில காரணங்களால் மைலேஜ் சற்று குறையும்.

மேலும் காப்பீடு தொடர்பான எந்த பிரச்சனையும் இல்லை என்று காப்பீடு நிறுவங்கள் விளக்கமளித்துள்ளன எனவும் அவர் கூறினார்.

உலகளவில் கணக்கெடுக்கும் இந்தியா!

உலகளாவிய வரத்து, எரிபொருள் பயணம் மற்றும் பொதுமக்களிடையே நிலவி வரும் குழப்பம் குறித்து 15 பக்க விரிவான கோப்பு ஒன்றை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அம்மைச்சகம் தொகுதித்துள்ளது என்று பூரி தெரிவித்தார்.

மேலும் இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் போன்ற அமைப்புகளுடன் விரிவாக கலந்து ஆலசித்த பின்னரே இந்த E20 வரம்பை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.