இந்தியா

ராமர் உட்பட அனைத்தையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வணிகமாக மாற்றுகின்றன: சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிகமாக மாற்றுகின்றன.

சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிக அல்லது வர்த்தக நடவடிக்கையாக மாற்றுவதாகவும், இது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் சி.பி.ஐ. எம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) அமைப்புக்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேபி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை ராமர் விவகாரத்தை கூட வணிகமயமாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு:

இது குறித்து பேசிய சி.பி.ஐ.(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, "அயோத்தியில் ராமர் கோயில் ஏன் கட்டப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மத ரீதியான பிளவுகளை உருவாக்கியது மட்டுமின்றி, அது ஊழலுக்கும் வழிவகுத்தது என்பதை நாம் சமீபத்தில் கண்டோம். சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவை அனைத்தையும் வணிகமாக மாற்றுகின்றன," என்று கூறினார்.

கோயிலுக்கு வழங்கப்பட்ட பக்தர்கள் காணிக்கைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

டெல்லியில் மாணவர்கள் மற்றும் சி.ஜே.பி. (CJP) ஆர்வலர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கூட, நுழைவு தேர்வுகளை நடத்துவதில் நிலவும் ஊழலே அடிப்படை காரணம் என்று கூறிய பேபி, அந்த தேர்வுகளும் "வணிகமாக மாற்றப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.

சிஜேபி போராட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளிகளால் தினந்தோரும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

ஒருபக்கம் ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அடக்குமுறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுக்க பரபரப்பான சழல் ஏற்பட்டுள்ளது.