இந்தியா

தொடர் கொலையாளிகள் அதிகம் உள்ள நாடுகள் - 6வது இடத்தில் இந்தியா!

பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

விசாரணை முறை

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.

அமெரிக்கா முதலிடம்

இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.

ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT