ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி நாராயண் பிரசாத் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னதாக விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், தற்போது குற்றம் சாட்டப்பட்ட அதே நீதிபதியே ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜித் நாராயண் பிரசாத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு, அப்போதைய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ். சோனக்கிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சோனக் நவம்பர் 27 அன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நீதிபதி பிரசாத் நவம்பர் 28 முதல் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு உயர் நீதிமன்றங்களின் பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் தலைமை நீதிபதி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை, நீதிமன்றத் தீர்ப்புகளால் பாதிக்கப்பட்ட மனுதாரர் அல்லது வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன.
இருப்பினும், நீதிபதி பிரசாத் வழக்கில், புகார்தாரர்களில் பலர் தங்களது குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில் ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் அரசு வட்டாரங்களின்படி, நீதிபதி பிரசாத்துக்கு எதிரான புகார்கள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் சென்றடைந்துள்ளன.
இது தொடர்பாக, அவர் தலைமை நீதிபதி சூர்ய காந்தை தொடர்புகொண்டு, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும் அவர் தற்போது இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி பிரசாத் 2014 செப்டம்பர் 26 அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
2018 நவம்பர் 22 அன்று அவர் மீண்டும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெறாத வரையில், அவர் 2029 ஜூன் 19 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக தொடர்வார்.