இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நன்கொடையில் பெரும் சரிவு - முந்தைய ஆண்டை விட 3 பங்கு குறைந்தது

செங்குத்தான இந்த சரிவுக்கு புரூடென்ட் நிறுவனமே காரணமாக இருந்துள்ளது.

2025-2026-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேலான நன்கொடையில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 3 பங்குக்கும் கீழே குறைந்துள்ளது.

நிதி பங்களிப்பு அறிக்கை

2025 -2026-ம் ஆண்டுக்கான கட்சி, நிதி பங்களிப்பு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை மிக அதிகமாக சரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

2024-2025-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேலான நன்கொடை கணக்கில் மொத்த வரவு ரூ.517.39 கோடியாக இருந்தது. இதில் புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டும் 42 சதவீதம் அதாவது துல்லியமாக 41.8 சதவீதம் நிதி பங்களிப்பை அளித்திருந்தது.

பெரு நிறுவனங்களிடம் இருந்து வந்த நிதி கணக்கில் புரூடென்ட் நிறுவனமே மிக அதிக தொகையை (ரூ.216.34 கோடி)வழங்கி இருந்தது.

ஆனால் 2025-2026-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேலான நன்கொடையில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 3 பங்குக்கும் கீழே குறைந்துள்ளது.

இந்த ஆண்டில் கிடைத்த நன்கொடை ரூ.130.69 கோடி மட்டுமே ஆகும். இது முந்தைய ஆண்டை விட 75 சதவீதம் சரிவு ஆகும். அதற்கு முந்தைய 2023-2024 -ம் ஆண்டை விட 53 சதவீதம் சரிவு ஆகும்.

வெறும் ரூ.25 கோடி

செங்குத்தான இந்த சரிவுக்கு புரூடென்ட் நிறுவனமே காரணமாக இருந்துள்ளது. இந்த நிறுவனம் 2025 2026-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ரூ.25 கோடி மட்டுமே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பங்களிப்பாளர்களில், ஸ்டார் சிமெண்டு (ரூ.5 கோடி), சஜ்ஜன் பஜங்கா (ரூ.4 கோடி), பிரேம்குமார் பஜங்கா ரூ.2 கோடி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

12 மடங்கு அதிகம்

இதற்கிடையே பா.ஜ.க. 2024-2025-ம் நிதியாண்டில் ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளாக ரூ.6.074.02 கோடியை பெற்றுள்ளது. இது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் பெற்ற வசூலை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகமாகும்.

2025-2026-ம் நிதியாண்டுக்கான பா.ஜ.க.வின் பங்களிப்பு அறிக்கையை தேர்தல் கமிஷன் இன்னும் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT