உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடைகளாக வழங்கப்பட்ட பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், உயர் அதிகாரிகளை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு கீழே பணி புரிந்தவர்களை கைது செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில், அயோத்தி கோவில் நன்கொடைகள் பணம் 100 கோடி இந்துக்கள் நம்பிக்கை மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மற்றவர்களின் செல்வத்தைத் தமதாக்கிக்கொண்டே ராமனின் பெயரை உச்சரிப்பது மட்டுமே மோடியின் மற்றும் அவரது சகாக்களின் ஒரே கனவாக உள்ளது.
ஸ்ரீ ராமல் கோவில் நன்கொடைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தால் ஒட்டுமொத்த நாடும் வேதனையடைந்துள்ளது. மக்களின் கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இத்தனை நாட்கள் கடந்த பின்னரும், ஆர்எஸ்எஸ் (RSS) மற்றும் பாஜக (BJP) உடனான தொடர்புகள் காரணமாக, இதில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளிகள் எவ்விதத் தடையுமின்றி சுதந்திரமாகச் சுற்றி வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஒட்டுமொத்த பாஜக-ஆர்எஸ்எஸ் இயந்திரமும், நன்கொடை திருட்டு ஊழலில் ஈடுபட்ட திருடர்களைப் பாதுகாப்பதிலும், இவ்வழக்கை ஒடுக்குவதிலும் ஈடுபட்டுள்ளன.
பிரதமர் அவர்களே, ஸ்ரீ ராமர் கோவில் தொடர்பான இந்த மோசடியில் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்களும் அதே அளவுக்குக் குற்றவாளிகளே. இந்த இழிவான செயலுக்காக பகவான் ஸ்ரீ ராமர் நிச்சயமாக உங்களுக்குத் தண்டனை அளிப்பார். அத்துடன் நாட்டு மக்களும் உங்களைப் பொறுப்புக்கூற வைப்பார்கள்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவி சுப்ரியா ஸ்ரீனேட், "அயோத்தி ராமர் கோவிலில் புனிதமான காணிக்கைகள் திருடப்பட்டதை ஒரு பெரும் பாவம். வரலாற்றிலேயே இந்துக்களின் நம்பிக்கை மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.
"இது வெறும் காணிக்கை திருட்டோ அல்லது மோசடியோ மட்டுமல்ல. இது ஒரு பெரும் பாவம். உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல்.
ராமர் கோவில் கட்டியதற்கான பெருமையை பிரதமர் ஏற்றுக்கொண்டால், இதற்கான பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும். அப்படியிருக்க, நன்கொடை திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மௌனம் காக்கிறார்? இவ்விசயத்தில் பிரதமர் மோடியின் மௌனம் பல முக்கிய கேள்விகளை எழுப்புகிறது" தெரிவித்தார்.