இந்தியா

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் புகார் - திரிணாமுல் காங்கிரஸின் ரூ.440 கோடி கொண்ட 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வங்கியில் இருக்கும் நிதி சட்டப்பூர்வமான வழிகளிலிருந்து வந்ததா அல்லது கள்ளப்பணமா, மோசடிப்பணமா என விசாரணை நடத்த அதிருப்தி எல்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ரூ.440 கோடி இருப்பு கொண்ட 3 முக்கிய வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க மாநில சைபர் கிரைம் காவல்துறை முடக்கியுள்ளது. நிதி எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணைக் கோரி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

புகாரின்படி, அந்த நிதி சட்டப்பூர்வமான வழிகளிலிருந்து வந்ததா அல்லது கள்ளப்பணமா அல்லது மோசடிப்பணமா என விசாரணை நடத்த அதிருப்தி எல்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரிதபிரத பானர்ஜி தலைமையில் 10 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிடாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மற்றும் கைப்பற்றி பாஜகவிடம் தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் மோதலும், மம்தாவுக்கு எதிராக போர்க்கொடியும் எழுந்துள்ளது.

80 எம்.எல்.ஏக்களில், சுமார் 65 பேர் ரிதபிரத பானர்ஜியின் அதிருப்தி குழுவிற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மம்தா பானர்ஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்த வங்கிக் கணக்குகள் முடக்கம் பெரும் அரசியல் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.