சமமான அரசியல் பிரதிநிதித்துவமும், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதும் மட்டுமே ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் என்று காக்ரோச் ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நிலவும் முறைகேடுகளை கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தத்துவங்களை சுட்டிக்காட்டி, இந்த பேரணிக்கு காக்ரோச் ஜனதா கட்சி தனது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமமான அரசியல் பிரதிநிதித்துவமும், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதும் மட்டுமே ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் என்று காக்ரோச் ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அரசாங்கங்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் சூழலை தேர்தல் ஆணையம் உருவாக்கக் கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கான நம்பகத்தன்மையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி, தேர்தல்களின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க அவரது பதவி விலகல் அவசியமானது என்று வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் இந்தியா கூட்டணியின் இந்த மாபெரும் பேரணி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்துள்ள நிலையில், காக்ரோச் ஜனதா கட்சியின் இந்த திடீர் ஆதரவு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.