பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டின் மாநாட்டு மையக்கருத்து "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
கடைசியாக கடந்த 2019 அக்டோபரில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2nd India-China Informal Summit மாநாட்டிற்கு ஜி ஜின் பிங் வந்திருந்தார்
சீன அதிபர் வரும் சனிக்கிழமை பிற்பகலில் டெல்லி வந்தடைவார் என்றும், மாநாட்டின் முதல் நாளான அன்றைய தினமே பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சீனாவுடனான இந்தியாவின் உறவு பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.
முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.