பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை

ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ரஷிய ராணுவ விமானங்கள்
ரஷிய ராணுவ விமானங்கள்
Published on
Summary

அதிபர் புதின் வருகைக்கு முன்னதாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் இந்தியா வருகை தந்துள்ளன.

இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வருகைக்கு முன்னரே அவரது பாதுகாப்பை இங்கு உறுதி செய்ய மூன்று ரஷிய ராணுவ விமானங்களில் உயர் அதிகாரிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

விமானங்கள்

நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷியாவின் அதிநவீன 'IL-76' போர் தளவாட போக்குவரத்து விமானம் உட்பட 3 ராணுவ விமானங்கள் நோய்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கின.

இந்த விமானங்களில் ரஷியாவின் உயர் மட்டப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தந்துள்ளனர்.

பொதுவாகவே ரஷிய அதிபர் புதினின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அவர் செல்லும்போது அவரின் மலத்தை சேமித்து வைக்க கூட உடன் பெட்டி ஒன்று எடுத்துச் செல்லப்படும்.

அதன் மூலம் அவரின் உடல்நலன் குறித்து வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

இந்த சூழலில் அதிபர் புதின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விவிஐபி வாகன போக்குவரத்து வசதிகள் குறித்து இந்திய மற்றும் ரஷிய அதிகாரிகள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புதின் வருகை தரும் விமானம் டெல்லியில் தரையிறங்குமா அல்லது நொய்டாவில் தரையிறங்குமா என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை.

நொய்டா விமான நிலையம்

கடந்த ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த புத்தம் புது விமான நிலையத்தில் ஒரு வெளிநாட்டு ராணுவ விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறையாகும்.

இதுவரை இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு ராணுவ விமானங்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தன.

முதல்முறையாக நோய்டா விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டு, ரஷிய விமானங்கள் அங்கு வந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com