பாராளுமன்றம்
இந்தியா

மக்களவையில் 30-ந்தேதி தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்போம் என தி.மு.க. தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் வருகிற 30-ந்தேதி (நாளை மறுதினம்) கூட இருக்கிறது. மக்களவை இரண்டு நாட்களும், மாநிலங்களவை இரண்டு நாட்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் பாஜக அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவை அலுவல் பட்டியல்

இந்த நிலையில் மக்களவையின் அலுவல் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் "மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நவம்பர் 30 அன்று அரசியலமைப்பு (132-வது திருத்த) மசோதா 2026-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்த) இரண்டாவது மசோதா, 2026-ஐயும், அர்ஜுன் ராம் மேக்வால் தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, 2026-ஐயும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்த மசோதாக்கள், லோக்சபா மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதையும், இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப தொகுதிகளை மறுசீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன (வரிசை எண் 11-இல் உள்ள மசோதா திரும்பப் பெறப்படும் பட்சத்தில் இது பொருந்தும்)" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT