நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
நிதி ஆயோக்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
* கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.
* வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டு முயற்சி முக்கியம்.
* நாட்டின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.