

நிதி ஆயோக் (NITI Aayog) என்பது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் முதன்மை சிந்தனைக் குழுவாகும். இது 2015-ம் ஆண்டு ஜனவரி 1 அன்று முந்தைய திட்டக் குழுவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது.
நாட்டின் திட்டமிடல் செயல்பாட்டில் அனைத்து மாநிலங்களையும் சமமாக ஈடுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். பிரதமர் இதன் தலைவராக செயல்படுவார்.
இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் பங்கேற்றார். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வாய்ப்பு உள்ளது.