நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான முரளி மனோகர் ஜோஷி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஒருபோதும் இல்லாதது என்பதைவிட காலதாமதம் சிறந்தது. தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளார். பிரதமரும் இதுகுறித்து உடனடி மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
இப்போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியக் கல்விச் சூழலில் விரைவில் அமைதி நிலவும் என்றும், இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ற ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ராஜினாமா சரிதான் எனப் பேசியுள்ளார். அரசியல் விமர்சனம், மோடி அரசின் கொள்கை பிரச்சினை தொடர்பாக இவர் விமர்சிக்காமல் இருந்தது இல்லை.
நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். தடுப்பை மீறிச் செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி ராஜினாமா செய்யக்கோரி போராடுவேம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக இன்று மதியம் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த போதிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே போராட்டத்தை வாபஸ் பெறப்படாது. மேலும், 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய பின், கராப்பான்பூச்சி ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற விசயங்கள் 4 வாரங்கள் கழித்து பேசி முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.