மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே.
Arvind Kejriwal
Published on

டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" சார்பில் போராட்டம் நடத்திய Gen Z இளைஞர்களின் தொடர் அழுத்தத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போராட்டத்தின் வெற்றியைக் குறிப்பிட்டு, ஆத்மநிர்பார் பாரத் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான 'அரவிந்த் கெஜ்ரிவால்' தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

உலகமே பணியும்... பணியவைக்கும் சக்தி வேண்டும்:

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில்: உலகமே பணியும், அதற்குப் பணியவைக்கும் ஆள் இருக்க வேண்டும் எனும் புகழ்பெற்ற வாசகத்தைப் பகிர்ந்து இளைஞர்களின் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

மக்களின் அதிகாரமும் ஜனநாயகமும்:

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே, எஜமானர்களான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நிற்கும்போது, எவ்வளவு பெரிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பணிந்துதான் ஆக வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண மனிதனின் உறுதி:

"நாட்டின் சாதாரண குடிமகன் அல்லது இளைஞர்கள் ஒரு மாற்றத்திற்காகத் தீர்மானம் செய்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் அவர்களைத் தோற்கடிக்க முடியாது" என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com