பிஸ்லெரி  
இந்தியா

பிஸ்லெரி விவகாரம் எதிரொலி: நாடு முழுவதும் பாட்டில் குடிநீரை சோதிக்க FSSAI முடிவு

FSSAI-இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்,

நாடு தழுவிய அளவில் FSSAI பாட்டில் குடிநீரைப் பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பரிசோதிப்பதற்காக நாடு தழுவிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஆய்வக முடிவுகள் ஒன்று முதல் 2 மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக FSSAI தலைமைச் செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி நேற்று தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்குமான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, FSSAI நாடு முழுவதும் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

"இந்தச் செயல்முறை தொடங்கிவிட்டது. நாங்கள் இதை நாடு முழுவதும் செய்து வருகிறோம்" என்று ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் புன்ஹானி கூறினார்.

இதற்கான காலக்கெடு குறித்துக் கேட்டபோது, ​​அவர், "இது மிகவும் பெரிய நாடு. எனவே, இதற்கு குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்," என்றார்.

காரணம் என்ன?

"இந்த நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, இது பல்வேறு உணவு வகைகளை ஆய்வு செய்வதற்கான FSSAI-இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்," என்று புன்ஹானி கூறினார்.

"கடந்த ஆண்டு நாங்கள் பல விஷயங்களை ஒவ்வொன்றாகக் கையாண்டோம். பால் பொருட்கள், இறைச்சி, முட்டை, தானியங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் ஆகியவற்றை நாங்கள் ஆராய்ந்தோம். தண்ணீரும் அந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்று அவர் கூறினார்.

பிஸ்லெரி

பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பாட்டில் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிஸ்லெரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஸ்லேரிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்று கேட்டதற்கு, புன்ஹானி, "இது ஒரு சாதாரண விஷயம், அது நடக்கும்" என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT