மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சி ஆதரவு அளித்துள்ளது.
மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சி ஆதரவு அளித்துள்ளது.நாடளுமன்றத்தில் தென்னிந்தியாவின் தற்போதைய 24 சதவீதப் பங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று தனது கட்சி எப்போதுமே கோரி வருவதாகவும், தற்போதைய முன்மொழிவு அதை உறுதி செய்வதாகவும் கே.டி.ஆர் இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) செயல் தலைவர் கே.டி. ராமராவ், கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களில் மூன்று பேர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் தற்போதைய 24 சதவீத பிரதிநிதித்துவப் பங்கு குறையக் கூடாது என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படுவதோடு, 2051-ஆம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ விகிதத்தை மாற்றக் கூடாது என்ற பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டிருப்பது தங்கள் முக்கியக் கவலையைத் தீர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதாவின் கீழ், தெலங்கானா மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 17-லிருந்து 26-ஆக உயரும் என கே.டி.ஆர் சுட்டிக்காட்டியுள்ளார்