பிரியங்க் கார்கே
இந்தியா

ஆர்.எஸ்.எஸ். மீது அவதூறு: பிரியங்க் கார்கே மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு சிட்டி நீதிமன்ற நீதிபதி பிரியங்க் கார்கேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்து கூறியதாக, மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான பிரியங்க் கார்கே, தற்போதைய கார்நாடக மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், முகமது நல்பாட் ஆகியோருக்கு எதிராக ஏ. தேஜாஸ் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பெங்களூரு சிட்டி நீதிமன்ற நீதிபதி, இந்த புகாரை ஆய்வு செய்த பிறகு, பிரியங்க் கார்கே மற்றும் முகமது நல்பாட் ஆகியோருக்கு எதிராக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் பிரிவு 356-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. அதன்படி இருவரும் மீது கிரிமினமல் வழக்கு பதிவு செய்யுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அத்துடன் இருவருக்கும் சம்மன் அனுப்பு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

ஆனால், அமைச்சர் தினேஷ் குண்டு ராவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்காமல், அவர் இந்த வழங்கில் இருந்து விடுவித்தது. பிரியங்க் கார்கே முதல் குற்றவாளியாகவும், முகமது நல்பாட் 3-வது குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜூலை 21-ந்தேதிக்கு முன்னதாக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.