இந்தியா

கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை? காங்கிரஸ் கண்டனம்

இந்த முடிவு ஆளுநரின் தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது என்றும், தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

கேரள ஆளுநர் மாளிகையான லோக் பவனில் அசைவ உணவுகள் சமைக்கக் கூடாது என்று புதிய ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2026-ல் கேரளாவின் 29-வது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்ற முதல் நாளே ஆளுநர் மாளிகை சமையலறையில் மீன், இறைச்சி உள்ளிட்ட எந்தவொரு அசைவ உணவும் சமைக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது என புதிய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.அறிவித்த இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிமின் முன்னாள் ஆளுநரான மாத்தூர், சமீபத்தில் கேரளாவின் முழு நேர அளுநராகன் பதவியேற்றுக்கொண்டார்.இந்த நிலையில் பதவியேற்ற முதல்நாளே லோக் பவன் சமையலறையில் அசைவ உணவு தயாரிக்கவோ பரிமாறவோ கூடாது என்று உத்தரவிட்டார். அவர் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமையன்று இந்த அறிக்கைகள் வெளிவந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது

கேரளாவின் 29வது ஆளுநராக மாத்தூர் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே வெளியான செய்திகளுக்கு எதிர்வினையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், இந்த முடிவு ஆளுநரின் தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது என்றும், தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்

கேரளம் ஒரு கடலோர மாநிலம் என்பதால், அங்கு பலதரப்பட்ட உணவுப் பண்பாடும், செழிப்பான மீன்வளமும் உள்ளது என்றும், மேலும் மக்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மக்கள் பழகிப்போன உணவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது இனிமேல் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று கட்டளையிடும் எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது, என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களின் உணவுத் தேர்வுகளில் அத்துமீறி நுழைந்து, கேரளாவின் பாரம்பரிய வாழ்க்கை முறையை அழிக்க முற்படும் கட்டுப்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுகின்றன என்று வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது சங் பரிவாரின் அரசியலமைப்புக்கு விரோதமான நலன்களின் தொடர்ச்சி என்றும் கேரளத்தில் சங் பரிவாரின் காவித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதல் படி இதுவாகும்," என்று ஆலப்புழா எம்.பி. குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT