அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆற்றங்கரையோரம் அரிப்பு காரணமாக சாரை கசாரா என்ற இடத்தில் இருந்து தொபாகுரா என்ற இடத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்துள்ளார். பிறகு குகுடோபாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இறுதியாக ஹஷ்டோபாவில் வசித்து வருகிறார். இங்கு இவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் 1999-ம் வகுப்பு 5-ம் வகுப்பு முடித்துள்ளார்.
எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தின்படி, மனுதாரர் 1988-ல் பிறந்தவர். இவர் கவுஹாத்தியின் போர்போரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, தினக்கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தான் ஒரு இந்தியராக நிரூபிக்க போராடி வருகிறார். 1951 என்.ஆர்.சி. ரெக்கார்டு உள்ளது. பள்ளி சான்றிதழ் உள்ளது. அவரது குடும்பத்தினர் பெயர் 1966-ல் இருந்து வாக்காளர் பட்டியலில இடம் பிடித்துள்ளது. பான் கார்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அவரது தந்தையை அழைத்துச் சென்று வாய் மொழியாக அவரது வம்சாவளி குறித்து சாட்சி அளித்துள்ளார். என்ற போதிலும் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம் அவரை இந்தியன் என்று அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் கவுகாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் 9-ம் பிரிவின் கீழ் நான் ஒரு வெளிநாட்டினர் இல்லை. இந்தியன் என்பதை நிரூபிக்க அவர் தவறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னுடைய தாத்தாவின் நிலப் பத்திரத்தை சமர்ப்பித்தும் பயனில்லை.