இந்தியா

துர்கா பூஜை பந்தல் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமித்ஷா

இந்த இக்கட்டான சூழலில், மேற்கு வங்க அரசு காயமடைந்த ஒவ்வொரு நபருக்கும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உறுதுணையாக நிற்கும்.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

கொல்கத்தாவில் உள்ள சர்பாகன் பொது துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பக்தர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்.

மேற்கு வங்க அரசு உறுதுணையாக நிற்கும்

கொல்கத்தாவில் உள்ள சர்பாகன் துர்கா பூஜை பந்தலில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பக்தர்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தேன்.

இந்தக் கடினமான நேரத்தில், மேற்கு வங்க அரசு காயமடைந்த ஒவ்வொரு நபருக்கும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உறுதுணையாக இருக்கும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியிடம் வேண்டிக்கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT