இந்தியா

அனைத்து முடிவுகளும் ஒரு மனதாக எடுக்கப்பட்டவை.. SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

மூன்று எஸ்ஐஆர் உத்தரவுகள் மூலம் படிவம் 6ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

எஸ்ஐஆர் மற்றும் படிவம் 6 தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் விளக்கம் அளித்துள்ளது.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட மூன்று கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) உத்தரவு ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த முடிவுடனேயே பிறப்பிக்கப்பட்டன என இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் அளித்துள்ளது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பாரபட்சமான நிர்வாக செயல்பாடு மற்றும் பிற ஆணையர்களின் கருத்தை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் செயல்முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஒருமித்த முடிவு

அந்த விளக்கத்தில், எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருதலைப்பட்சமான முடிவுகள் அல்ல என்றும், அவை முழு ஆணையத்தின் ஒருமித்த கருத்துடன் பிறப்பிக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் 2025, அக்டோபர் 2025 மற்றும் மே 2026 ஆகிய மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட மூன்று கட்ட எஸ்ஐஆர் உத்தரவுகளும் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றிருந்தன என்று ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தன் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

படிவம் 6 சர்ச்சை

மேலும் அதில், புதிய வாக்காளர் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் 'படிவம் 6', எஸ்ஐஆருக்காக திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

மூன்று எஸ்ஐஆர் உத்தரவுகள் மூலம் படிவம் 6ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர் செயல்முறையில் உள்ள முறைகேடுகள் மற்றும் ஞானேஷ் குமாரை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள வேளையில், ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

SCROLL FOR NEXT