SIR பணிக்கு சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா?.. பதில் அளிக்க மறுத்த தேர்தல் ஆணையம்

சட்டப்பூர்வ அதிகாரம் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிக்கு இருக்கிறது
தேர்தல் ஆணையம்
Published on: 
Summary

எஸ்ஐஆர் பணிக்காக சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதிலளிக்க மறுத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்காக சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் எஸ்ஐஆரை கைவிட கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் இந்தியா கூட்டணி போராட்டங்களை நடத்தி வருகிறது.

கேள்வி

இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சமூக ஆர்வலர் முஜீப் அயூப் என்பவர், எஸ்ஐஆர் பணிகளின்போது வாக்காளர் பட்டியல்களில் உள்ள பிழைகள் மற்றும் முரண்பாடுகளை கண்டறிய சிறப்பு மென்பொருள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா? என்றும் அந்த மென்பொருள் என்ன என்பது குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்

பதில்

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் வர்த்தக ரகசியங்கள், வணிக நம்பிக்கை மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பானது என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து அதற்கு விலக்கு உள்ளது என தெரிவித்துள்ளது.

அதே நேரம் சிறப்பு மென்பொருள் எதுவும் இதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஒரு வாக்காளரை சேர்ப்பதா அல்லது நீக்குவதா? என்பதை உண்மைகள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அதிகாரிகள் தீர்மானிக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கும், திருத்துவதற்கும் பொறுப்பான சட்டப்பூர்வ அதிகாரம் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிக்கு இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com