ஈரானில் வரும் சனிக்கிழமை (ஜூன்.4) தொடங்கவுள்ள முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, காங்கிரஸின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கும், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈரான் செல்வது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். ஆனால் பிரதமர் மோடிக்குப் பதிலாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிதாவையும், பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைனையும் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஈரானில் பெரும்பான்மையாக வாழும் ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு நாட்டின் உச்சத்தலைவர் இறப்பிற்கு ஒரு மாநில ஆளுநரை அனுப்பும் அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
கமேனி இறுதிச்சடங்கு
மத்திய கிழக்கில் போர் தொடங்கிய முதல்நாளே அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிச்சடங்குகள் ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஜூலை 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. ஜூலை 9ம் தேதி கமேனியில் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.