இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் கதீர் நெசாமிபூரை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் நடைபெறும் 16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா - ஈரான் இடையேயான இருதரப்பு உறவு குறித்து விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எத்தியோப்பியாவின் தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு சேவையின் பகுப்பாய்வு நிர்வாக இயக்குநர் மில்லியோன் லெமா டடேஸையும் தோவல் சந்தித்தார். இதன்போது இந்தியா-எத்தியோப்பியா மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்தவும், உறுதியாக்கவும் இரு தரப்பினரும் பேச்சுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.