இந்தியா

டெல்லியில் தீபாவளிக்கு முன் காற்றின் தரம் மோசமானதாக மாறும்:வானிலை முன்னறிவிப்பு

வெள்ளிக்கிழமை முதல் காற்றின் தரம் மோசமானதாக மாறக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நான்காவது நாளாக 'மிகவும் மோசமான' பிரிவில் நீடித்து வருகிறது. தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை முதல் இது 'கடுமையான மேலும் மோசமடையக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்படி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 369 ஆக இருந்தது. இது புதன்கிழமை இதே நேரத்தில் பதிவான 377 என்ற அளவிலிருந்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நகரின் சராசரி காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 350 ஆகவும், திங்கட்கிழமை 324 ஆகவும் காற்றின் தரமானது இருந்துள்ளது. தலைநகரில் செயல்படும் 59 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில், 18 நிலையங்கள் காற்ரின் தரத்தை கடுமையாக இருப்பதாகவே தெரிவித்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் (CPCB) தரவுகளின்படி, மாலை 4 மணிக்கு ஜஹாங்கிர்புரியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 454 ஆகப் பதிவாகியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரநிலைகளின்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 0-50 என்பது 'நல்லது'. 51-100 என்பது 'திருப்திகரமானது'. 101-200 என்பது 'மிதமானது'. 201-300 என்பது 'மோசமானது'. 301-400 என்பது 'மிகவும் மோசமானது' மற்றும் 401-500 என்பது 'கடுமையானது' என வகைப்படுத்தப்படுகிறது.

அதன்படி நாளை டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக நீடிக்கும் என்றும், வெள்ளி முதல் ஞாயிறு வரை கடுமையான பிரிவுக்கு செல்லும் என்று காற்றுத்தர முன் எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது.

மேலும் அடுத்த் ஆறு நாட்களுக்கும் காற்றின் தரம் மிகவும் மோசமானது வரையிலான பிரிவுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக டெல்லிக்கான காற்றின் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT