இந்தியா

சிஜேபி போராட்டம் அறிவிப்பு - டெல்லியில் இணைய சேவை முடக்கம்

டெல்லியின் முக்கியப் பகுதிகளான ஜன்பத் மற்றும் கர்த்தவ்யா பாதை பகுதியைச் சுற்றி இந்த முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP)மற்றும் பிற மாணவ அமைப்புகள் சார்பில் நாளை (அக்டோபர் 10, 2026) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அறிவித்துள்ளன.

போராட்டம் அறிவிப்பு, இணைய சேவை முடக்கம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்களை வலியுறுத்தி போராட்டத்தை சிஜேபி,அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளன.இந்த போராட்ட எதிரொலியால் டெல்லியில் மொபைல் இணைதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு

டெல்லியின் முக்கியப் பகுதிகளான ஜன்பத் மற்றும் கர்த்தவ்யா பாதை பகுதியைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று இரவு 10:00 மணி முதல் நாளை (அக்டோபர் 10, 2026) இரவு 10:00 மணி வரை 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படும் என்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மொபைல் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

காவல்துறை தீவிர கண்காணிப்பு

போராட்ட எதிரொலியால் டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 20,000 போலீஸ் மற்றும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையங்களை மூட பரிந்துரை

டெல்லியில் தேர்தல் தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை அக்.10 நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு, , 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.இந்த கட்டுபாடுகளின் படி ,ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி, படேல் சவுக், ஜன்பத், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ. உள்ளிட்ட 57 நிலையங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த சிஜேபி மற்றும் AISF மாணவர் அமைப்புகளின் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக கோவா எக்ஸ்பிரஸ்யிலில் புனேவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த மாணவர்கள் மத்தியப் பிரதேசத்தின் இதார்சி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறைனரால் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் BNSS பிரிவு 163 அமலில் உள்ளதால், அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT