தோல் தொழிற்சாலையில் தீ விபத்து 
இந்தியா

கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - தீயணைப்புத்துறை அதிகாரிகள் காயம்

தோல் தொழிற்சாலை குடோனில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால் அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

கொல்கத்தா :


மேற்கு வங்க மாநில தலைநகர்  கொல்கத்தாவின் டாங்க்ரா பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில்

பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

சிறிது நேரத்தில் தீ மளமளவென தோல் தொழிற்சாலை பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த தொழிற்சாலையின் அருகில் வசித்து வந்த குடிசைவாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்ததும் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், குறுகிய பாதை காரணமாக, தீயணைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக மேற்கு வங்க தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார். 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினருக்கு அந்த பகுதி உள்ளூர் மக்கள்  உதவி செய்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

தீப் பிடித்து எரிந்த தோல் பதனிடும் தொழிற்சாலைக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பது குறித்து விபரங்கள் உடனடியாக வெளியாக வில்லை.

இதையும் படியுங்கள்... தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்- பயணிகள் பீதி