இந்தியா

6 எம்.பி.க்கள் பாஜக கூட்டணிக்கு ஜம்ப்?.. உத்தவ் சிவசேனாவுக்கு ஷாக்

எதிரணியில் வலுவாக இருந்த கட்சிகளின் பல எம்.பிக்களை பாஜக தங்கள் வசம் இழுத்துள்ளது

2022 இல் மகாராஷ்டிராவின் சிவசேனா இரண்டாக பிளவுபட்டது. தலைவர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி குழு பாஜக கூட்டணிக்கு சென்றது.

தற்போது சிவசேனா, உத்தவ் சிவசேனா, ஷிண்டே சிவசேனா என எதிரெதிர் அணிகளாக செயல்பட்டு வருகிறது.

உத்தவ் சிவசேனாவில் 9 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 6 மக்களவை எம்.பிக்கள் இன்று மதியம் ஷிண்டே சிவசேனாவின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிளர்ச்சி எம்.பி.க்கள்

முன்னதாக கடந்த டெல்லி விரைந்த உத்தவ் தாக்கரே தனது அணியின் எம்பிகள் கூட்டத்தை நடத்தினார். ஆனால் இதில் கிளர்ச்சி எம்பிக்கள் 6 பேர் கலந்துகொள்ளவில்லை.

நேற்று அந்த கிளர்ச்சி எம்பிக்களில் ஒருவரான நாகேஷ், தான் ஷெண்டே சேனாவில் இணைய உள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்தார். அவருடன் ஏனைய சிலரும் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவரையும் சேர்த்து மொத்தம் 6 எம்பிக்களும் இன்று மதியம் 3 மணியளவில் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து அவரது அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் லோட்டஸ்

ஆபரேஷன் லோட்டஸ் மூலம் இந்த அணி காவலுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக உத்தவ் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

இவ்வாறாக கடந்த சில மாதங்களிலேயே டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மகராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா என எதிரணியில் வலுவாக இருந்த கட்சிகளின் பல எம்.பிக்களை பாஜக தங்கள் வசம் இழுத்துள்ளது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மகாராஷ்டிராவில் இரு அணிகளாக பிரிந்துள்ள தேசியவாத காங்கிரசிலும், சரத் பவார் அணியை சேர்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் உள்ள மறைந்த அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.