இந்தியா

4 லட்சம் விருந்தினர்கள்.. வீசி எறியப்பட்ட உணவு - டிரைவரை எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ - பீகார் திருமணம் வைரல்

கபாப்கள் மற்றும் கறிகளுக்காக சுமார் 1,000 கிலோ ஆட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீகார் பாஜக எம்எல்ஏ அனந்த் சிங் வீட்டு திருமண விழா பேசுபொருளாகி உள்ளது.

பீகாரின் மோகமா தொகுதி பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங் உடைய இளைய மகள் ஷிவாங்கி, நவம்பர் 25 அன்று பாட்னா மாவட்டத்தில் உள்ள தனது குடும்பத்தின் மூதாதையர் கிராமமான நத்வானில் ரிஷிகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் அதன் ஆடம்பரமான கொண்டாட்டங்களுக்காக செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

நெரிசல்

ஊடக மதிப்பீடுகளின்படி, சுமார் 4 லட்சம் பேர் கூடியதால், கிராமமே திருமண திடலாக மாறியது.

இங்கிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள பாட்னா செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது இதன் பிரமாண்டத்தை உணர்த்தும்.

முக்கிய விருந்தினர்களுக்காக ஆறு ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன.

குதிரைகள் பந்தயம், கூட்ட நெரிசல் காரணமாக கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

விருந்து

ஆனந்த் சிங் குடும்ப இல்லத்தில் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் விருந்தினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.

500 சமையல் கலைஞர்கள் கொண்ட குழு விருந்தை தயாரித்தது. தற்காலிக சமையலறைகளில் 150க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்தனர்.

கபாப்கள் மற்றும் கறிகளுக்காக சுமார் 1,000 கிலோ ஆட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மணமகனின் 151 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பு, அவருக்குப் பரிசளிக்கப்பட்ட லேண்ட் ரோவர் டிபெண்டர் கார், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் மற்றும் வாணவேடிக்கை ஆகியவை நிகழ்வின் பிரமாண்டத்தை மேலும் கூட்டியது.

இவ்வளவு திட்டமிடல் இருந்தும், கூட்டம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. ஒருமுறை பயன்படுத்தும் தட்டுகள் கூட்டத்தின் மீது வீசப்படுவதும், விருந்தினர்கள் தங்கள் உணவைப் பிடிப்பதற்காக அட்டைப்பெட்டிகள், செய்தித்தாள்களை பயன்படுத்துவதும் காணொளிகளில் பதிவாகின.

இதனிடையே ஊர்வலத்தின்போது தனது கார் டிரைவரை ஆனந்த் சிங் எட்டி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் கூற்றுப்படி, கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட 28 குற்றவியல் வழக்குகள் ஆனந்த் சிங் மீது நிலுவையில் உள்ளது.

துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் அவர் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

SCROLL FOR NEXT