இந்தியா

சத்தீஸ்கர் சிறைகளில் 285 கைதிகள் பலி.. தாமாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

ஜனவரி 1 முதல் நடப்பு ஆண்டு ஜனவரி 31 வரை 66 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில சிறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 285 கைதிகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதிகபட்சகமாக 2022இல் 90 பேர் இறந்துள்ளனர். அதேபோல் 2025, ஜனவரி 1 முதல் நடப்பு ஆண்டு ஜனவரி 31 வரை 66 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் சிறைகளில் அடிப்படை வசதிகள், உரிய சுகாதர மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் கைதிகள் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுபற்றி தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இது அடிப்படை மனித உரிமைகளையும் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையை மீறுவது என ஆணையம் தெரிவித்துள்ளது.