நாடு முழுவதும் 74 நாட்களில் 170 பேர் போலீஸ் கஸ்டடியில் மரணம்.. பீகார் முதலிடம்! | custodial deaths

கடந்த 74 நாட்களில் தமிழநாட்டில் 7 கஸ்டடி மரணங்களும், தெலுங்கானாவில் 5, கர்நாடகா, கேரளாவில் 3 கஸ்டடி மரணங்களும் பதிவாகி உள்ளன.
நாடு முழுவதும் 74 நாட்களில் 170 பேர் போலீஸ் கஸ்டடியில் மரணம்.. பீகார் முதலிடம்! | custodial deaths
Published on

போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது கஸ்டடி டெத், லாக்கப் டெத் என்று அழைக்கப்படுகிறது.

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போலீஸ் காவலில் நடக்கும் மரணங்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரையிலான முதல் 74 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 170 கஸ்டடி மரணங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கணக்கின்படி, 19 கஸ்டடி மரணங்களுடன் பீகார் மாநிலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பீகாருக்கு அடுத்தபடியாக 18 கஸ்டடி மரணங்களுடன் ராஜஸ்தான், 15 உடன் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதிலும் 9 மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் பாதியிலேயே அந்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த 74 நாட்களில் தமிழநாட்டில் 7 கஸ்டடி மரணங்களும், தெலுங்கானாவில் 5, கர்நாடகாவில் 3, கேரளாவில் 3 கஸ்டடி மரணங்களும் பதிவாகி உள்ளன.

நாடு முழுவதும் 2021-22 காலகட்டத்தில் 176 கஸ்டடி மரணங்களும், 2022-23 காலகட்டத்தில் 163 மரணங்களும், 2023-24 காலகட்டத்தில் 157 மரணங்களும், 2024-25 காலகட்டத்தில் 140 மரணங்களும், 2025-26 (மார்ச் 15 வரை) 170 கஸ்டடி மரணங்களும் பதிவாகி உள்ளன.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தினபடி, கைதிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது, சிறை அல்லது காவலில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக கைதிகள் தற்கொலை செய்துகொள்வது, விசாரணையின் போது நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்கள் ஆகியவை இந்த கஸ்டடி மரணங்களுக்கு காரணங்களாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com