மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் பலத்த மழை பெய்ததால் நகரமே மிதக்க நேரிட்டது.
இந்த நிலையில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மிக மிக பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் தேங்கி உள்ளது.
நேற்று இரவு நீண்ட நேரம் மழை பெய்ததால் மும்பையில் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வாகன போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரெட்அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன. இதனால் மும்பையில் பெரும்பாலானவர்கள் இன்று வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றே அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் 50 மில்லி மீட்டர் மழை பெய்தது.