ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆண்கள் கலப்பு டைவிங் போட்டியில் பிரிட்டன் தங்க பதக்கம்