புனே:
21 ஆண்டுகளாக நடந்து வந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வர்த்தக நலன் கருதி சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலாவது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 6-ந் தேதி வரை நடக்கிறது.
தென்னிந்தியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியான இதன் இரட்டையர் போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
நடப்பு சாம்பியனான இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி இணைந்து மீண்டும் களம் காணுகிறது. இந்திய வீரர் புரவ்ராஜா, சக மூத்த வீரர் லியாண்டர் பெயஸ்சுடன் இணைந்து ஆடுகிறார். முன்பு புரவ்ராஜாவுடன் இணைந்து ஆடிய திவிஜ் சரண், அமெரிக்க வீரர் ஸ்காட் லிப்ஸ்கியுடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார்.