செய்திகள்

நாகர்கோவிலில் லாரி டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த லாரி டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த பறக்கை, சீயோன் புரத்தை சேர்ந்தவர் பால்சன் (வயது 48). லாரி டிரைவர். இவரது மனைவி முத்துசெல்வி (41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பால்சன் கடந்த சில மாதங் களாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்றார். இருந்தும் அவருக்கு நோய் பூரணமாக குணமாகவில்லை.

இதுபற்றி நேற்று மாலையிலும் மனைவியிடம் கூறி வருந்தினார். அவரை மனைவி முத்துசெல்வி ஆறுதல் படுத்தினார். அதன்பின்பு வீட்டை விட்டு சென்ற பால்சன், இரவில் வீடு திரும்பவில்லை.

இன்று காலை அவர் வீடு அருகே வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.இது பற்றி அக்கம்பக்கத்தினர் முத்துசெல்விக்கு தகவல் கொடுத்தனர். அவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம், சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் பிரகாஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews