செய்திகள்

சோம்தேவ் தேவ்வர்மன், கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

டென்னிஸ், பேட் மிண்டன் விளையாட்டில் சாதனைகள் புரிந்த இந்திய அணி வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. #PadmaAwards Padmashri

டென்னிஸ், பேட் மிண்டன் விளையாட்டில் சாதனைகள் புரிந்த இந்திய அணி வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டென்னிஸ் விளையாட்டில் சாதனைகள் புரிந்த திரிபுராவை சேர்ந்த வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும்  ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பேட் மிண்டன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்து ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.