செய்திகள்

இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - ஜெயலலிதா நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.