கொரோனா அச்சத்தால் முகமூடி அணிந்துள்ள மக்கள் 
செய்திகள்

ஈரான் : கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதால் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.

டெஹ்ரான்:

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 135 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.