கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெய்தீப்தங்கர் இன்று காலை திடீரென்று சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அப்போது சட்டசபை வளாகத்தில் வி.வி.ஐ.பி. நுழைவுவாயில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது.
சட்டசபை வளாகத்துக்குள் செல்ல நுழைவுவாயிலை திறக்கும்படி கூறினார். ஆனால், சட்டசபை நடக்காத காரணத்தால் கதவைத் திறக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கவர்னர் சட்டசபை முன்பு 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனாலும், வி.வி.ஐ.பி. நுழைவு வாயில் கேட் திறக்கப்படாததால் சாதாரண நுழைவு வாயில் வழியாக சென்று சட்டசபை கட்டிடத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறும் போது, சட்டசபை கூட்டத் தொடர் ஒத்திதான் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு சட்டசபை மூடப்பட்டிருப்பதாக அர்த்தம் இல்லை. பின்னர் எதற்காக நுழைவு வாயிலை பூட்டி வைத்துள்ளனர்? நான் சட்டசபை வளாகத்தை பார்வையிடவே வந்தேன்’ என்றார்.