கல்கேரி:
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அல்பெர்டா மாகாணம் கல்கேரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறினார்கள். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்-வீராங்கனைகளின் சவால் முடிவுக்கு வந்தது.
அதேசமயம், கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்த ஜோடி, கொரியாவின் கிம் ஹோ-சின் சான் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் இந்திய ஜோடி 17-21, 22-20, 18-21 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் மூன்றாம் தரநிலை ஜோடியான மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி, கொரியாவின் கிம் ஹோ-சியங் ஜே சியோ ஜோடியுடன் மோதியது. இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி ஜோடி, 12-21 15-21 என நேர்செட்களில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
இதன்மூலம் கனடா ஓபன் அனைத்து பிரிவு போட்டிகளிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.