அடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் - ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை
அடுத்த மாதம் இந்தியாவுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.