சென்னை:
சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றி அறிவிப்பு பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் 3 மொழிகளில் அறிவிப்பு வெளியிடுவதால் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காலை நேரங்களில் மட்டும் தமிழ், இந்தி நீக்கப்பட்டு ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குநா் இன்று அறிவித்துள்ளார். #chennaiairport #tamilnews