செய்திகள்

அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: ஜி.கே. வாசன் பேட்டி

அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

சரோஜா உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. நியாயத்தின் அடிப்படையில் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். ஊழல் புகார் உறுதிப்படுத்தப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT