செய்திகள்

உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி என பெயர் மாற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத் எனும் மாவாட்டத்துக்கு அயோத்தி என பெயர் மாற்றம் செய்வதாக முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UP #YogiAdityanath #Ayodhya

உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த தீபோத்சவ் நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது கவுரவம், மரியாதை மற்றும் பெருமையின் சின்னம்தான் அயோத்தி. ராமபிரான் மூலம் அடையாளம் காணப்படும் இந்த அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். உலகின் எந்த சக்தியாலும் அயோத்திக்கு அநீதி இழைக்க முடியாது’ என குறிப்பிட்டார்.