நெல்லை:
பாளை மனக்காவலம் பிள்ளை நகர் நேரு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் ராபர்ட்(வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
ராபர்ட் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம். அதன்படி நேற்றிரவு காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். இன்று அதிகாலை தேவாலயம் செல்வதற்காக ராபர்ட் காரை எடுக்க சென்றார்.
அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ராபர்ட்டு க்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.